சென்னை:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் இன்று அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
ஜெ.மறைவை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதியில் வேட்பாளர் குறித்து, நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்சி மன்ற குழுவில் சலசலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, வேட்பாளர் அறிவிப்பு தாமதமானது.
இதுவரை அதிமுக சார்பில், மதுசூதனன், பாலகங்கா உள்பட 27 பேர் போட்டியிட தலைமை கழகத்திடம் விருப்பம் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், அ.தி.மு.க. ஆர்.கே.நகர் அ.தி.மு.க., வேட்பாளர் இன்று மீண்டும் கூடுகிறது. இன்றைய கூட்டத்தில் வேட்பாளர் யார் என்று இறுதி முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பாளர் யார் என்பதை அறிய அ.தி.மு.க., தொண்டர்கள் ஆவலாக உள்ளனர்.