கடந்த வருடம் குக் வித் கோமாளி என்ற தொடரை அறிமுகம் செய்தது விஜய் டிவி. சமையல் போட்டியில் நகைச்சுவை கலைஞர்களை இறக்கி அசத்தி வருகின்றனர்
புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் இதில் பங்கு பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை விஜய் டிவி நவம்பர் 14 ஆம் தேதி முதல் சனி-ஞாயிறு கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பி வருகின்றனர்.
தற்போது RJ பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார், இதற்கான ப்ரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.