விஜய் ஆண்டனியுடன் இணையும் ரித்திகா சிங்…..!

Must read

 

2016-ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங்.
சமீபத்தில் இவரது நடிப்பில் ஓ மை கடவுளே திரைப்படம் வெளியானது.இந்த படம் ரித்திகாவின் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்தது.
ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு ஏதும் இல்லாமல் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்களுள் ரித்திகாவும் ஒருவர். இதனால் ரித்திகா சோஷியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக உள்ளார் .


இந்நிலையில் ரித்திகா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் பற்றிய தகவல் தெரியவந்தது. லோட்டஸ் பிக்சர்ஸ் மற்றும் டேபிள் பிராஃபிட் இணைந்து இன்பினிட்டி பிலிம்ஸுடன் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் ரித்திகா சிங். விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை பாலாஜி குமார் இயக்குகிறார். இன்று விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் வாழ்த்து கூறி போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரை பகிர்ந்த ரித்திகா, இந்த படத்தில் நடிப்பது குறித்து உறுதி செய்துள்ளார்.

More articles

Latest article