தினகரனால் உயிருக்கு ஆபத்து!: பாதுகாப்பு கேட்டு மதுசூதனன் புகார்

Must read

 

 

சென்னை:

டிடிவி தினகரன் மற்றும் பெரம்பூர் சமஉ வெற்றிவேல் ஆகியோரால் தனக்கும் தனக்கு ஆதரவாக இருக்கும் ராஜேஷ் என்பவருக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், தங்கள் இருவருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் அவைத்தலைவர் மதுசூதனன் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரனை எதிர்த்து தான் போட்டியிட்டதில் இருந்து தனக்கும் தனது ஆதரவாளர் ராஜேஷ் என்பவருக்கும் கொலை மிரட்டல் தொடர்ந்து வருவாதகவும் மது சூதனன் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article