மும்பை

பிரபல பாலிவுட் நடிகரான ரிஷிகபூர் தாம் புற்று நோயில் இருந்து மீண்டதற்கு தமது மனைவி மற்றும் குழந்தைகளே காரணம் என நன்றி தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் ராஜ்கபூரின் மகனான ரிஷிகபூரும் ஒரு பிரபல நடிகர் ஆவார்.   பாபி என்னும் படத்தின் மூலம் அறிமுகமான ரிஷிகபூர் தன்னுடன் பல படங்களில் நடித்த நீது சிங் கை திருமணம் செய்தார்.   அவர்களுடைய மகன் ரண்பிர் கபூர் தற்போது இளைய தலைமுறையின் பிரபல நாயகனாக உள்ளார்.  இவர் மகள் பெயர் ரிதிமா ஆகும்.

ரிஷி கபூருக்கு எலும்பு மஜ்ஜையில் புற்று நோய் ஏற்பட்டது.   அதனால அவர் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொள்ள சென்ற வருடம் செப்டம்பர் மாதம் சென்றார்.    அப்போது அவர் ”என்னுடைய 45 வருடத்துக்கும் மேலான திரையுலக வாழ்க்கையில் இருந்து சில மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொள்கிறேன்.   அமெரிக்காவில் சிகிச்சைக்காக செல்ல இருக்கும் நான் சிகிச்சை முடிந்ததும் உங்களை சந்திக்கிறேன்.” என அறிவித்திருந்தார்.

ரிஷிகபூர் தற்போது  புற்று நோயில் இருந்து மீண்டுள்ளார்.  அவர் செய்தியாளர்களிடம், “நான் புற்று நோயால் அவதிப்பட்ட போது எனது மனைவி நீது எனது உடன் இருந்து என்னை நன்கு கவனித்துக் கொண்டார்.   எனது மகன் ரண்பீர் மற்றும் மகள் ரிதிமா ஆகியோரும் எனது பொறுப்புக்களை அவர்கள் தோளில் சுமந்தனர்.   அவர்களுக்கு மிகவும் நன்றி.

அமெரிக்காவில் மே மாதம் 1 ஆம் தேதி என்னுடைய எட்டாவது கட்ட சிகிச்சை தொடங்கி உள்ளது.   நான் தற்போது புற்று நோயில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ளேன்.    எனக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை பாக்கி உள்ளது.   அதற்கு இன்னும் இரு மாதங்கள் ஆகும்,

எனது இந்த மீட்சிக்கு காரணம் எனது குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் எனது ரசிகர்களின் அன்பு வாழ்த்துக்களும்  ஆகும்.   இதற்காக நான் அனைவருக்கும் எனது உளமாரந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூ றி உள்ளார்