புதுடெல்லி: ஷ்ரேயாஸ் காயம் காரணமாக விலகியுள்ளதால், 14வது ஐபிஎல் தொடரில், டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பன்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தவர் ஷ்ரேயாஸ். கடந்த 13வது ஐபிஎல் சீசனில், டெல்லி அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றவர் ஷ்ரேயாஸ்.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின்போது, இவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. எனவே, அந்த ஒருநாள் தொடரிலிருந்தும், 14வது ஐபிஎல் தொடரிலிருந்தும் விலக நேரிட்டது.

எனவே, டெல்லி அணியை இந்த சீசனில் யார் வழிநடத்துவார் என்ற கேள்வி எழுந்தது. ஸ்டீவ் ஸ்மித், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு என்ற போட்டி இருந்தது. இந்நிலையில், டெல்லி அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார் ரிஷப் பன்ட்.

ரிஷப் பன்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டதை பலரும் வரவேற்றுள்ளனர்.