ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில், 2ம் நாள் ஆட்டநேர முடிவில், 136 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் விண்டீஸ் அணி 354 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் பிராத் வெய்ட் சதமடித்தார். கார்ன்வால் 73 ரன்களை அடித்தார்.

பின்னர், இரண்டாம் நாளில் தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய இலங்கை அணியில், துவக்க வீரர் திமுத் 1 ரன்னுக்கு வெளியேற, திருமன்னே 55 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பெர்னான்டோ 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தற்போது, சந்திமால் 34 ரன்களிலும், டி சில்வா 23 ரன்களிலும் களத்தில் உள்ளனர். தற்போதைய நிலையில், 3 விக்கெட்டுகள் இழந்து 136 ரன்களை சேர்த்துள்ள இலங்கை அணி, விண்டீஸ் அணியைவிட தற்போதைய நிலையில் 218 ரன்கள் பின்தங்கியுள்ளது.