துபாய்: ஐசிசி வெளியிட்ட சர்வதேச ஒருநாள் பேட்ஸ்மென்கள் தரவரிசையில், இந்திய பேட்ஸ்மேன் விராத் கோலி, மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் மொத்தமாக 870 புள்ளிகளை பெற்றுள்ளார்.

அதேசமயம், ஜஸ்பிரிட் பும்ரா, பந்துவீச்சாளர் வரிச‍ையில் 4வது இடத்திற்கு சென்றுவிட்டார். இவருக்கு 690 புள்ளிகளே கிடைத்துள்ளன. முதலிடத்தில் இருப்பவர் நியூசிலாந்தின் டிரென்ட் பெளல்ட்.

இந்தியாவின் புவனேஷ்வர் குமார், ஒருநாள் பந்துவீச்சாளர் வரிச‍ையில் 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஷர்துல் தாகுர் 93வது இடத்திலிருந்து 80வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்தியாவின் ரோகித் ஷர்மா, ஒருநாள் பேட்ஸ்மேன் வரிசையில் 3வது இடத்திற்கு வந்துள்ளார். ஹர்திக் பாண்ட்யா, ஆல்ரவுண்டர் வரிசையில் 42வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ரிஷப் பன்ட் 100 இடங்களுக்குள் வந்துள்ளார்.