ரியோடி ஜெனிரோ:
ரியோ ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி பிரேசில் அணி தங்கம் வென்றது. பெனால்டி ஷுட் அவுட் முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி ஜெர்மனியை வீழ்த்தியது.
hirunews_Brazil
கால்பந்து இறுதி போட்டியில் பலம் வாய்ந்த இரு அணிகளான பிரேசிலும், ஜெர்மனியும் மோதின. ஆட்டம் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக சென்றது. ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் பிரேசில் வீரர் நெய்மர் கோல் அடித்து ஆட்டத்தை மேலும் விறுவிறுப்பாக்கினார். ஜெர்மனி அணியினிர் அடுத்த சில நிமிடங்களில் ஒரு போலை போட்டு போட்டியை சமன் செய்தனர். அதன்பிறகு இரு அணிகளும் கோல்கள் போட முடியாத அளவுக்கு ஆட்டம் விறுவிறுப்பாகவும், வேகமாகவும், ரசிகர்களை இருக்கையில் அமரவிடாமல் செய்தன.
ஆட்டம் இறுதிவரை இரு அணிகளும் சமன் நிலையிலேயே இருந்தால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்திலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்க முடியாத நிலையே காணப்பட்டது.
Rio-728x459
இதையடுத்து பொனல்டி முறை கொண்டு வரப்பட்டது. இதில் பிரேசில் மேலும் 4 கோல்கள் போட்டது. ஜெர்மனி அணி 3 கோல்கள் மட்டுமே போட்டது. இதனால்  5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
ஒலிம்பிக்கில் முதன்முறையாக பிரேசில் அணி தங்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.