ரியோ:
லிம்பிக் பெண்களுக்கான தனிநபர் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதி போட்டியில் வென்று அசத்தியிருக்கிறார்.
தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள சீனாவின் டாய் இங்கை, வென்றிருக்கிறார் சிந்து. இந்த டாய் இங், கடந்த  2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிந்துவின்  இந்த வெற்றியை  அனைவரும் பாராட்டும் அதே நேரம்,  அவரது பயிற்சியாளர்  கோபி சந்த்தையும் பாராட்டுகிறார்கள்.

சிந்து
சிந்து

சிந்துவின் தந்தை ரமணா, பயிற்சியாளர் கோபி சந்தை பற்றி கூறுவதை கேளுங்கள்:
பத்து மாதங்களுக்கு முன் ஒரு நாள்…  ஹைதராபத்திலுள்ள புலேலா கோபிசந்த பாட்மின்டன் அகாடமி…
பி வி சிந்துவுடன் சேர்த்து சுமார் ஐம்பது பேருக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறார் பயிற்சியாளர் கோபிசந்த்.
சிந்துவின் ஆட்டத்தில் விறுவிறுப்பு இருக்குமே தவிர, உற்சாக கூவல் ஏதும் அவரிடமிருந்து வெளிப்படாது. அவரிடம் , “விளையாடும்போது ஆக்ரோஷமாக கத்த வேண்டும்” என்று  சொல்கிறார் பயிற்சியாளர் கோபிசந்த்.  அப்போதும், சிந்துவுக்கு உற்சாகக்கூவல் வரவில்லை.
உடனே, “சப்தமிடவில்லை என்றால், இனி பாட்மின்டன் பேட்டை தொட உன்னை அனுமதிக்கமாட்டேன்”  என்று கோபிசந்த் கண்டிப்புடன் கூறுகிறார்.
பயிற்சியாளரின் கோபமான உத்தரவை கேட்ட சிந்துவின் கண்களில் சாரை சாரையாக நீர் ஊற்றியது.  எனினும் இறுதியாக வேறு வழியின்றி தனி ஆளாக களத்தின் மத்தியில் நின்று கத்தினார்.
நானும் முன்னாள் இந்திய கைபந்து வீரர். 1986ல் நடந்த ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றவன்தான்.   ஆகையால் பயிற்சியாளர் கோபிசந்தின்  கருத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்தேன். . போட்டியின்போது நாம் எழுப்பும் ஆக்ரோஷமான கர்ஜனையும் எதிரியை கலங்க வைக்க வல்லது என பயிற்சியாளர் கோபி கூறியது மிகச் சரியே.
ஆனால், உற்சாக கூவல் என்பது சிந்துக்கு மிகவும் கடினமான ஒரு செயல், அவள் அமைதியான சூழலில் வளர்ந்த அமைதியான பெண்.
இந்திய குழந்தைகள் மிகவும் பாதுகாக்கப்பட்ட சூழ்நிலையில் வளருவதால், அவர்கள் தங்களை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை.
பயிற்சியாளர் கோபி,  மிகச் சிறந்த மனிதர்.   அனைவராலும் பாராட்டபடும் அளவுக்கு யுக்திகளை வீரர்களுக்கு கற்றுத்தருகிறார். சீன பெருஞ்சுவராக இருந்தாலும் அதை பாட்மின்டன் மூலம் உடைக்க முடியும் என வீரர்களை நம்பவைக்கிறார்.  கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டாம் நிலை வீராங்கனையை சிந்து வீழ்த்தினார். “உன்னால் முடியும்” என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாக அவர் செயல்பட்டதால் கிடைத்த வெற்றி.  எளிதில் திருப்படுத்த முடியாத கோபிசந்தே சிந்துவின்  அன்றைய ஆட்டத்தை கண்டு நெகிழந்துபோனார்.
வாரத்தில் ஆறு நாட்கள் கோபியும் சிந்துவும் சூரிய உதயத்திற்கு முன்பே பயிற்சி எடுக்க ஆரம்பிப்பார்கள்.  கோபி, சிந்துவுகெகு பலவிதமான பயிற்சிகளை கொடுப்பார். உலகத்தரம் வாயந்த பயிற்சியாளர் கொடுக்கும் பயிற்சியை பக்கத்திலிருந்து பார்த்தால், ஒரு அறிவியல் வகுப்பை பார்க்கும் அனுபவம் கிடைக்கும்.” என்கிறார் ரமணா.
கோபி சந்த்
கோபி சந்த்

“உங்களின் வீரர்கள் பதக்கங்களையும் வாங்கினால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்” என்று பயிற்சியாளர் கோபியிடம்  கேட்டதற்கு “பொறுப்புகள் அதிகரிக்கும்” என்று கூறினார் கோபி. 2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் தோற்று வெளியேறியபோது தன் சக வீராங்கனை அபர்னா “அடுத்த ஒலிம்பிக்கில் நான் பங்கேற்பேனா என தெரியவில்லை ஆனால் கண்டிப்பாக என் சார்பாக யாரையாவது அனுப்பி இந்தியாவுக்கு ஒலிம்பிக் பதக்கம் கொண்டு வருவேன்”. இக்கனவு 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்சில் சிந்து வென்ற வெண்கல பதக்கம் மூலம் நிறைவேறியது. இம்முறை அவர் கோபிசந்தின் கனவு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களின் கனவாக திகழ்கிறார்” என்றார் கோபி.
தற்போது ஒலிம்பிக்கில் காலிறுதி போட்டியில் வென்றுவிட்ட  சிந்து,  அரை இறுதியில், ஆறாம் நிலையில் வீராங்கனையான ஜப்பானின் நோஷோமி ஒகுஹாராவை  சந்திக்கிறார். இதுவரை இவரும் நேருக்கு நேர் மோதிய நான்கு போட்டிகளில் மூன்றில் (2014, 2015 மற்றும் பிப்ரவரி 2016 ஆம் ஆண்டுகளில்)  ஒகுஹாராவும் ஒன்றில்(2012 ஆம் ஆண்டு) சிந்துவும் வெற்றி பெற்றுள்ளனர்.
“காலிறுதியில் சிந்து சிறப்பாக விளையாடினார். இதே ஆட்டம் தொடர்ந்து வெளிப்படுமானால், சிந்து தங்கம் வெல்வது உறுதி”  என்று நம்பிக்கையுடன்  கூறுகிறார் பயிற்சியாளர் கோபி.
நம்பிக்கை வெல்லட்டும்!