ரியோ:
லிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள சென்றிருக்கும் இந்திய குழுவுக்கு, தலைமை மருத்துவ அதிகாரியாக, எந்தவித தகுதியும் அற்ற பவன்தீப் டோனி சிங் அனுப்பப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆக.5 முதல் பிரேசிலின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.இதில் இந்தியா சார்பாக 100க்கும் மேற்ப்பட்ட வீரர்கள் பங்குபெற்று வருகின்றனர். இந்தியா வீரர்களுக்கு மருத்துவ உதவிகள் அளிக்க அனுப்பட்ட மருத்துவ உதவிக்குழுவுக்கு தலைமை மருத்துவராக சென்றிருப்பவர் பவன்தீப் டோனி் சிங் என்பவர். இவர் ஒரு மருத்துவரே கிடையாது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இவர்  கதிர்ப்பட பதிவாளர் (எக்ஸ்ரே ஆபரேட்டர்) மட்டுமே.

தர்லோச்சன் சிங்
தர்லோச்சன் சிங்

இது குறித்து இந்திய வீரர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள்,” கதிர்ப்பட பதிவாளரின் வேலை  எக்ஸ்-ரே , ஸ்கேன் எடுப்பதுதான். பவன்தீப் டோனி் சிங், மருத்துவர் அல்ல. அதாவது அவர் போலி டாக்டர்.  அவருக்கு விளையாட்டு சம்மந்தமான சிகிச்சைகள் ஏதும் தெரியவில்லை. அப்படியே நாங்கள் அவரிடம் சென்று உதவி கோரினால், Combiflam(வலி நிவாரணி)யை தவிர வேறு ஏதும் தருவதில்லை” என இந்திய வீரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், “ ஒலிம்பிக் கிராமத்தில் பவன்தீப் டோனி சிங்  இருக்கும் நேரமே மிகக் குறைவு.  உல்லாச பயணம் வந்திருப்பது போல ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிறார்” என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தகுதியே இல்லாத ஒருவர் ஒலிம்பிக் மருத்துவக்குழுவுக்கு தலைமை தாங்கி செல்ல காரணம் என்ன?
அவர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் துணை தலைவர் தர்லோச்சன் சிங்கின் மகன்! இதுதான் தகுத