பல கோடி ரூபாய் முதலீட்டில் பல்வேறு விளையாட்டு அரங்கங்கள், பயிற்சி நிலையங்கள், குடியிருப்புகள், கோல்ஃப் மைதானங்கள் கட்டப்பட்டன.
ஆனால் தற்போது முறையான பராமரிப்பின்மையால் பொலிவிழந்து காணப்படுகின்றன.

மரியோ ஃபில்ஹோ மரக்கானா ஸ்டேடியம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. முக்கிய விளையாட்டு அரங்க வாயில்கள் மூடப்பட்டது. நகரின் ஒலிம்பிக் கோல்ஃப் மைதானமும் மூடப்பட்டுள்ளது.

இப்போது-மிகவும் ஆபத்தான அப்பட்டமான காட்சியாக, மரக்கானா விளையாட்டு தரைமேற்பரப்பில் புழுக்கள் தாக்கிச் சேதமடைந்துள்ளது. அரங்கத்தில் உள்ளே ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன. சுவர்கள் மற்றும் கட்டிடங்களிலிருந்து தாமிரக் கம்பிகள் திருடப்பட்டுள்ளன. அரங்கத்தினுள் உள்ள 78,000 இருக்கைகளில் 10 சதவிகித இருக்கைகள் கிழித்தெறியப்பட்டுள்ளன. அரங்கத்தின் மின் கட்டணம் கிட்டத்தட்ட 940,000 அமெரிக்க டாலர்கள் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதால், பல்வேறு மாதங்களுக்குப் பின் உள்ளூர் மின்சார வாரியம் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டது.

முன்னதாக ஜனவரி மாதம் மரக்கானா அரங்கத்திற்குள் உள்ள பாதுகாப்பு உபரணங்கள் களவு போயின. அர்ங்கத்திற்குள் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த தீ அணைப்பு கருவிகள், குழாய்கள், தொலைக்காட்சிகள் மற்றும் மரியோ ஃபில்ஹோ (இந்தப் பத்திரிக்கையாளரின் நினைவாகத் தான் இந்த அரங்கத்திற்கு பெயர் வைக்கப்பட்டது) வின் வெண்கலச் சிலையைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதனையடுத்து, அரங்கம் நிர்வகிக்கும் கூட்டமைப்பின் உறுப்பினரான ஒப்ரெக்ட் கட்டுமான நிறுவனம் பகுதியாக – அன்பு நிகழ்விடத்தின் நிர்வாகம் எடுத்துக்கொள்ள ரியோ டி ஜெனிரோ மாநில அழைப்பு விடுத்தார்.

ரியோ டி ஜெனிரோ கால்பந்து கூட்டமைப்பு 10 ஜனவரி 10ம் தேதி வெளியிட்ட ஒரு அறிக்கையில், “ 2014 ல் ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காகப் பெருமளவில் மாற்றியமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட அரங்கம், தற்போது மிகுந்த பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இந்த அரங்கத்தின் எதிர்காலம் மிகவும் கவலைக்குரியதாய் உள்ளது”.

1950 உலக கோப்பை இறுதி ஆட்ட நடைபெற்ற மைதானத்தை ரியோ உள்ளூர் அணிகளான போடோஃபோகோ, ஃப்ளெமிங்கோவின், ஃப்லோமினென்ஸ், மற்றும் வாஸ்கோடகாமா ஆகியன் பயன்படுத்திய வந்தன. ஆனால், தற்போது இந்த நான்கு அணிகளும் தங்களுக்குள் எதிர்காலத்தில் இதனை யார் நிர்வகிப்பது என மல்லுக்கட்டிக்கொண்டு பராமரிக்காமல் இருக்கின்றனர்.

20 மில்லியன் அமெரிக்கன் டாலர் மதிப்பில் கட்டப்பட்ட கோல்ப் மைதானம், போதுமான வீரர்களை ஈர்க்க தவறியதால், வருமானம் போதாமல், பராமரிப்பு செய்யப்படாமல் காய்ந்து காணப்படுகின்றது.

ப்ரோகோல்ஃப் அமைப்பின் கண்காணிப்பாளர், நீல் கிலேவெர்லி, பிரேசிலிய கோல்ஃப் கூட்டமைப்பு இரண்டு மாத காலமாக ஊதியம் வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

ஒலிம்பிக் பார்க்-கில் உள்ள மற்ற நான்கு விளையாட்டு அரங்கங்களில் -, டென்னிஸ் மையம் மற்றும் சைக்கிள்பந்தய மையம் –ஒலிம்பிக் விளையாட்டு முடிந்த பின்னர் புதிய ஆபரேட்டர்களுக்கு ஈர்க்க தவறிவிட்டன. டிஹனால் இவை மூடப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கும் பயன்படுத்த வழிவகைசெய்யப்படவில்லை.

ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக அரசு முதலீடு செய்து உள்கட்டமைப்புவசதிகளை உருவாக்கினாலும், அதனைப் பயன்படுத்த வசதியுள்ள, உரிய விளையாட்டு வீரர்கள் இல்லாததால் களையிழந்து காணப்படுவது வேதனைக்குறியது.