பாரீஸ்:

பிரான்சில் அணுமின் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிர்ஷ்டவசமாக அங்கு கதிர்வீச்சு ஏற்பட்டு உயிர்ச்சேதம் நிகழவில்லை.
பிரான்சில் வடமேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள நார்மன்டி என்ற இடத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு அணு உலை அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் நேற்றுமாலை திடீரென பயங்கர வெடிச்சத்தம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு தீ பற்றி எரியத் தொடங்கியது. மளமளவென தீ பரவியதால் பணியாளர்கள் அலறி அடித்து ஓடினர். இதையடுத்து தீயணைப்புப் படையினர்

அங்கு விரைந்து சென்று  நெருப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனிடையே அணுஉலையிலிருந்து கதிர்வீச்சு ஏற்பட்டதாக புரளி பரவியதால்  அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் அவர்கள் எந்தப்பாதிப்புக்கும்  ஆளாகவில்லை என்று அறியப்பட்டது.

தீ பிடித்த பகுதியில் இருந்த அணு உலையில் மின் உற்பத்தி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.