ரியாவிடம் மூன்றாவது நாளாக சிபிஐ விசாரணை…..!

Must read

நடிகை ரியாவிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை (28.08.20) அன்று விசாரணையைத் தொடங்கினர். 10 மணி நேரங்களுக்கும் மேலாக நீடித்த விசாரணையில் சுஷாந்த் உடனான உறவு குறித்து ரியாவிடன் ஏராளமான கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் முன்வைத்தனர்.

கடந்த இரண்டு நாட்களைத் தொடர்ந்து மூன்றாவது நாளான இன்றும் சிபிஐ அதிகாரிகள் முன்பு ரியா ஆஜரானார். அவரிடம் சுஷாந்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், அவர் உட்கொண்ட மருந்துகள் குறித்து ரியாவிடன் கேள்வியெழுப்பியதாகக் கூறப்படுகிறது.

மேலும் சுஷாந்துக்கும் ரியாவுக்கு இடையிலான பிரச்சினைகள், சுஷாந்த் உடனான வாட்ஸ் அப் சாட்டில் போதைப் பொருட்கள் குறித்த உரையாடல், சுஷாந்துக்கும் அவரது குடும்பத்துக்கும் இடையே இருந்த பிரச்சினைகள், பணப் பரிமாற்றம், முதலீடு திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஏராளமான கேள்விகள் ரியாவிடம் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது.

ரியா அளித்த பதில்கள் திருப்திகரமான இல்லை என்று சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.

More articles

Latest article