வளைகுடா பகுதியில் உள்ள ஆறு அரபு நாடுகளில் வேலை செய்யும் இந்திய தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய பரிந்துரையை மத்திய அரசு திருத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதார மந்தநிலையைத் தொடர்ந்து வேலையிழப்பு அதிகரித்து வந்த நிலையில் கடந்தாண்டு செப்டம்பரில் இந்தியர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை குறைத்து பரிந்துரை செய்தது.
இதனால் இந்தியர்கள் அதிகளவில் வேலையிழப்பது தவிர்க்கப்படும் என்று கூறப்பட்டது.
தற்போது வேலைவாய்ப்பு மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளதால் புலம்பெயர்ந்த இந்திய தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து பத்து மாதங்களுக்குப் பின் இவர்களின் ஊதியத்தை மீண்டும் பழைய குறைந்தபட்ச ஊதியத்தை பரிந்துரை செய்துள்ளது.
இந்தத் தகவலை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் ராஜ்ய சபாவில் வியாழனன்று தெரிவித்தார் இதனால் வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் 88 லட்சம் இந்தியர்கள் பயனடைவார்கள் என்று கூறினார்.