
சென்னை :
பிரபல சித்தமருத்துவ நிபுணரான சி.என். ராஜதுரையின் மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சி.என். ராஜதுரைக்கு சொந்தமான சிஎன்ஆர் ஹெர்ப்ஸ் மருத்துவமனையில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
வரி ஏய்ப்பு காரணமாக சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை உள்பட ஐதராபாத், பெங்களூரு, எர்ணாகுளம், டில்லி, மும்பை உள்பட பல இடங்களில் கிளைகளை விரித்துள்ள சிஎன்ஆர் ஹெர்ப்ஸ் மருத்துவ நிறுவனம். இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து அவரது நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பப்படும் விளம்பரங்களில், சொரியாசிஸ் போன்ற தோல் நோய் பிரச்னைக்கு சித்தமருத்துவ முறையில் மருத்துவ தீர்வு காணப்படும் என விளம்பரம் செய்து வந்தவர் சித்த மருத்துவர் சி.என்.ராஜதுரை என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]