சென்னை:

ன்று 65வது பிறந்தநாள் காணும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுகவின் செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று 65 பிறந்தநாள். இதை மாநிலம் முழுவதும் திமுகவினர் உற்சாகமாக கொண்டி வருகின்றனர்.

தனது பிறந்தநாள் முன்னிட்டு கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த மு .க.ஸ்டாலின், தி.மு.க. தலைவர் கருணாநிதி யிடமும், தாயார் தயாளு அம்மாளிடமும் ஆசி பெற்றார். அதைத்தொடர்ந்து, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களையும் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து அவர் வாழ்த்து பெற்று வருகிறார்.

அவருக்கு மாற்றுக்கட்சி தலைவர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலினின் 65-வது பிறந்தநாளை ஒட்டி நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

ஸ்டாலின் பிறந்தநாளின்போது அவரை சந்திக்க வருபவர்கள், தனக்கு சால்வை அணிவிக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக புத்தகங்கள் அளித்தால் நல்லது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.