சென்னை: அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 60 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு சட்டபேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் 07.09.2021 அன்று சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58-லிருந்து 60-ஆக உயர்த்தப்படும் எனஅறிவித்தார்.
இதையடுத்து, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகள் மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 60 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.