புதுடெல்லி: உணவுப் பொருட்களின் விலை குறைவால், நாட்டின் சில்லறைப் பணவீக்கம், மார்ச் 19ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 5.91% என்பதாகக் குறைந்துள்ளது.

நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் சில்லறை பணவீக்கமானது நடப்பாண்டு பிப்ரவரியில் 6.58% ஆக இருந்தது. கடந்தாண்டு இதே மார்ச் மாதத்தில் 2.86% என்பதாக இருந்தது.

கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக மார்ச் 19ம் தேதி வரை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. நிகர பணவீக்கம் மார்ச் மாதத்தில் 8.76% ஆக இருந்துள்ளது. கடந்த மாதத்தில் இருந்த 10.81% என்பதிலிருந்து குறைந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் மற்றும் அமலாக்கத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

சில்லறைப் பணவீக்கத்தை தீர்மானிப்பத்தில் இரு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை முக்கிய காரணியாக விளங்குகிறது. பணவீக்கத்தை சுமார் 4% என்பதாக வைத்திருக்க ரிசர்வ் வங்கியை மத்திய அரசு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.