இஸ்லாமாபாத்:
ந்தியாவுடனான பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் ஏற்கனவே இருமுறை நடந்துள்ள நிலையில் இனிமேலும் இந்தியாவுடன் ஆன போருக்கு பாகிஸ்தான் தயாராக இல்லை இந்தியாவுடன் போர் என்பது இனி தேவையற்றது என பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நிலை சிக்கலாக இருக்கும் நிலையில் இனி மேலும் ஒரு போருக்கு நாடு தயாராக இல்லை என்றும் எனவே இந்தியாவுடன் இனி இப்போதைக்கு போர் எதுவும் இருக்காது என்றும் பாகிஸ்தான் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.