சென்னை: இலங்கை தமிழர்களுக்கு உதவிப்பொருட்களை அனுப்ப அனுமதி வழங்க கோரி இன்று சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொருளாதார நெருக்கடியாக கடுமையான சிக்கலில் சிக்கிதத்தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உள்பட சில நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. ஐ.நா. மற்றும் உலக வங்கியும் உதவி வருகின்றன. அங்கு நிலவி வரும் பொருளாதார சிக்கலினால், உணவுப்பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இதனால்,ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ வழியில்லாமல் திணறி வருகின்றனர். மேலும், இலங்கை தமிழர்களில் சிலர் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

மற்றொருபுறம், இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சேதான் காரணம், அவர்களது குடும்பத்தினர் உடனே ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலக வேண்டும் அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,தமிழக சட்டப்பேரவையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது. அதன்படி,அத்துறை சார்ந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

இதற்கிடையில்,  இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஏற்பாடுகளை செய்ய அனுமதி தரக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தனி தீர்மானம் கொண்டு வருகிறார். அதன்படி,உணவு,அத்தியாவசிய பொருட்கள்,மருந்துகளை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி தரக் கோரி தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

‘ஒரு நாடே பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கும்போது, ஒரு தரப்பினருக்கும் மட்டும் உதவி வழங்க முடியுமா? அதை அந்த நாடு எப்படி அனுமதிக்கும்? சிங்களவன் அனுமதிப்பானா? இதனால் மீண்டும் அங்கு இன வேற்றுமை தலையெடுக்காதா? தமிழனுக்கு வழங்கப்படும் பொருட்களை சிங்களவன் அடித்து பறிக்க மாட்டானா? சிங்களவர் ஆட்சி செய்யும் நாட்டில், தமிழர்களுக்கு மட்டும் நிவாரண உதவிகளை எப்படி வழங்க முடியும்? இலங்கை மக்களுக்கு என மொத்தமாக வழங்கினால்தான் அது சரியாக இருக்கும். ஆனால் தமிழனுக்கு மட்டும் என்றால்…..? அங்கு தமிழன் நிம்மதியாக வாழ்வது இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு பிடிக்கவில்லை போலும்… இதிலுமா அரசியல்…