சென்னை:

பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரிக்கு வருகை தர உள்ள நிலையில், கோ பேக் மோடி ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்காகி வருகிறது. ஏற்கனவே மோடி தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #Goback modi…..3முறை தேசிய அளவில் டிரெண்டிங்காகியிருக்கும் நிலையில், தற்போது 4வது முறையாக டிரெண்டிங்காகி வருகிறது. இது பாஜகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று பிற்பகல் கன்னியாகுமாரி வருகிறார். அங்கு புதிய பாம்பன் பாலத்துக்கான அடிக்கல், தேஜஸ் ரயில்  உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில்,  பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டிவிட்டரில் தமிழகத்தை சேர்ந்தவர்கள், #Goback modi என்று மோடியின் வருகைக்கு எதிராக தொடர்ந்து டிவிட் செய்து வருகிறார்கள்.

பிரதமர் மோடி எப்போது தமிழகம் வந்தாலும் அவருக்கு எதிராக #GoBackModiஎன்ற ஹேஷ்டேக் வைரலாவது வழக்கமாகி உள்ளது. திமுக சென்னையில் நடத்திய கருப்பு கொடி போராட்டத்தில் இருந்துதான் இந்த டிரெண்ட் உருவானது. இந்த நிலையில் தற்போது 4வது முறையும் டிரெண் டிங்காகி இருப்பது  பாஜகவினரிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.