இந்தியா முழுவதும் கொரோனா பரவல்  இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் பிரதமர் மோடி இதுவரை எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தடுப்பூசி தட்டுப்பாடு, குறைந்த அளவிலான மக்களுக்கே தடுப்பூசி போடப்பட்டிருப்பது, தடுப்பூசி உற்பத்தியை பொது துறை நிறுவனங்களிடம் வழங்காதது,

https://twitter.com/TribalArmy/status/1384040865409077248

கொரோனா கட்டுப்பாடு விவகாரத்தில் பா.ஜ.க. ஆளும் மாநிலம் பா.ஜ.க. அல்லாத மாநிலம் என்று பாகுபாடு பார்ப்பது என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதோடு,

திறைமையற்ற பிரதமர் மோடி என்ற விமர்சனத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வைத்துள்ளார்.

வடமாநிலங்க ள் பலவற்றில் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமலும் ஆக்சிஜன் இல்லாமலும் பலர் உயிரிழக்க நேரிடும் நிலையில் உயிரிழப்பையும் பாதிப்பையும் குறைத்து காட்டுவதாக நாடு முழுவதும் பேசப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட நாட்டின் பல கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

இதனை தொடர்ந்து இன்று டிவிட்டரில் பதவி விலகுங்கள் மோடி #ResignModi என்ற ஹாஸ்டாக் வைரலானது இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் மோடி பதவி விலகவேண்டும் என்று பதிவிட்டுள்ளனர்.

காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், திரினாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும் மோடி பதவிவிலக கோரி பதிவிட்டு வருவது மக்களிடையே மோடி மீது இருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்துவதாக உள்ளது.