முதல்வர் மம்தா மன்னிப்பு கேட்க 48 மணி நேர கெடு: குடியுரிமை மருத்துவர்கள் சங்கம்

Must read

கொல்கத்தா:

ருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டுமானால் மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அதற்கு 48 மணி நேரம் கெடு விதித்துள்ளது குடியுரிமை மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இல்லையேல் காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபடப்போவதாக வும் அறிவித்து உள்ளது.

கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி மரணம் அடைந்த நிலையில், நோயாளியின் உறவினர்கள் மருத்துவர்களின் கவனக் குறைவே காரணம் எனக்கூறி, மருத்துவர்களை சரமாரியாகத் தாக்கினர்.

இதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி மருத்துவர்கள் போராட்டத்தில் குதிக்க, அவர்களுக்கு கொல்கத்தா அரசு மருத்துவர்கள் மட்டுமின்றி, டில்லி எய்ம்ஸ் மருத்து வர்கள் உள்பட பல மாநில மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து வரும் 17ந்தேதி (திங்கட்கிழமை) நாடு தழுவிய போராட்டத்துக்கு அகில இந்திய மருத்துவர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ். கே.எம். மருத்துவமனைக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி சென்றபோது, தங்களுக்கு நீதி வேண்டும் எனக்கூறி டாக்டர்கள் கோஷம் எழுப்பியதால் அவர் கோபமடைந்து,  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் 4 மணி நேரத்திற்குள் பணிக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்தார்.

மம்தாவின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து 5வது நாளாக போராட்டத்தை நீட்டித்து வருகின்றனர். இதனால் சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், டில்லி குடியுரிமை மருத்துவர்கள் சங்கம், மம்தாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 48 மணி நேரத்திற்குள் மருத்துவர்களின் கோரிக்கைளை நிறைவேற்றப்படா  விட்டால்  காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article