டில்லி:

ர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே  மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி பெற தேவையில்லை என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறி உள்ளார்.‘

நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டில்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி, அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பின்னர்,  பின்னர், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மனு அளித்தார்.

அந்த மனுவில், காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடகாவிற்கு முழு அதிகாரம் உள்ளது. புதிய கட்டுமானம் மேற்கொள்ள தமிழகத்தின் அனுமதி வாங்க வேண்டும் என விதிமுறையோ சட்டமோ இல்லை. மேகதாது அணைக்கு தமிழகத்தின் அனுமதி வாங்க வேண்டும் என மத்திய நீர்வள ஆணையம் கூறியுள்ளது.

மத்திய அரசு தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கொடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தின் தண்ணீர் பிரச்னை பற்றி எடுத்துக்கூறிய முதல்வர், கர்நாடக அணை கட்ட அனுமதி கொடுக்கக்கூடாது என வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.