சென்னை: ஆன்லைன் பேமென்டில் பிரச்சினைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்திருக்கிறது.

நாடு முழுவதும் சில்லறை விற்பனை கடைகளில் ஆன்லைன் பேமெண்ட்ஸ் மூலம் வர்த்தகம் செய்வதில் முன்னணியில் இருந்து வந்த   பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிமீது சமீப காலமாக ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, அந்த வங்கியின் உரிமத்தை ரத்து செய்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஏப்ரல் 24ந்தேதி அன்று எடுக்கப்பட்டு உள்ளது. இது சில்லரை வணிகர்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்ச்சியான இணக்கமின்மை மற்றும் மீறல்கள் காரணமாக, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் (PPBL) உரிமத்தை ரிசர்வ் வங்கி  ரத்து செய்தது. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் படி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) என்பது இந்தியாவின் பணவியல் கொள்கையை நிர்வகித்தல், நாணயத்தை வெளியிடுதல் மற்றும் தனியார், பொது மற்றும் வெளிநாட்டு வங்கிகள் உள்ளிட்ட வங்கி அமைப்பை மேற்பார்வையிடுதல் ஆகியவற்றுக்குப் பொறுப்பான மத்திய வங்கி மற்றும் ஒழுங்குமுறை அமைப்பாகும். 1935-ல் நிறுவப்பட்டு, 1949-ல் தேசியமயமாக்கப்பட்ட இது, இந்திய அரசின் கீழ் நாட்டின் உச்ச நிதி நிறுவனமாகச் செயல்படுகிறது.

உரிமம் ரத்து செய்யப்பட்டதற்கான 3 காரணங்களை ஆர்பிஐ லிஸ்ட் போட்டிருக்கிறது.

முதல் காரணம், விதிமீறல்கள்தான். வங்கி நிர்வாகம் தொடர்ந்து விதிமுறைகளை மதிக்காமல் செயல்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.

இரண்டாவது காரணம், வாடிக்கையாளர் நலன் விஷயத்தில் கோட்டை விட்டது. வங்கியின் செயல்பாடுகள் வாடிக்கையாளர்களின் மற்றும் பொதுமக்களின் நலனுக்கு எதிராக இருந்ததாக RBI கருதுகிறது.

மூன்றாவது காரணம், நிர்வாகக் குறைபாடுகள். அதவாது வங்கியின் மேலாண்மைத் தரம் மற்றும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதில் தோல்வி ஏற்பட்டிருக்கிறது.

 

[youtube-feed feed=1]