டில்லி

ங்கிகள் பணம் எடுக்க கட்டணத்தை அதிகரிக்கலாம் என ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

தற்போது கொரோனா தொற்று அச்சுறுத்தலால் வங்கிகள் குறைந்த நேரமே இயங்கி வருகின்றன.  இதனால் வங்கியில் இருந்து பணம் எடுக்க அனைவரும் ஏ டி எம் களை நம்பி உள்ளனர்.  மேலும் கணக்கில் பணம் இருப்பு, கணக்கு விவரம், மினி ஸ்டேட்மெண்ட், உள்ளிட்ட அனைத்தையும் ஏ டி எம் மூலமே பெற்று வருகின்றனர்.

சமீபத்தில் பெங்களூரு நகரில் ஏ டி எம் ஒன்றில் பணம் எடுக்க வந்த பெண் தாக்கப்பட்டுள்ளார்.  இதனால் அனைத்து ஏ டி எம் களிலும் 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் நியமிக்க வேண்டும் என வங்கி நிர்வாகங்களை மாநில அரசுகள் வலியுறுத்தி உள்ளன.   இவற்றில் பாதுகாவலர்கள் நியமிக்க மற்றும் க்ண்கானிப்பு காமிராக்களை பொருத்தக் கோடிக்கணக்கில் செலவாகும் எனக் கூறப்படுகிறது.

எனவே இந்த செலவுகளை ஈடுகட்ட வங்கிகள் ஏ டி எம் களில் பணம் எடுப்போரிடம் இருந்து கட்டணம் வசூலிக்கலாம் என ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.   தற்போது வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் ஏ டி எம் களில் இருந்து 5 முறை பணம் எடுப்பது உள்ளிட்ட சேவைகளைக் கட்டணமின்றி பெற முடியும்.

அதற்கு மேல் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ரூ.21 வசூலிக்கலாம் என ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது.  இந்த கட்டண விதிப்பை 2022 ஜனவரி 1க்கு மேல் விதிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.    இந்த முறை தற்போதுள்ள கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மக்களுக்கு மேலும் அவதியை உண்டாக்கும் என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.