டில்லி

இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 596 பேர், மற்றும் டில்லியில் 305 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 17,01,072 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 81 பேர் மரணம் அடைந்து இதுவரை 21,597 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 1,231 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 16,67,232 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.   தற்போது 12,243 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் உத்தரப்பிரதேச மாநிலம் ஆறாம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 305 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 14,30,433 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 44 பேர் உயிர் இழந்து இதுவரை 24,748 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 560 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 14,01,473 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,212 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஏழாம் இடத்தில் உள்ளது.