சென்னையில் மழை ஓய்ந்து சுமார் 40 மணி நேரம் ஆனநிலையிலும் சென்னையின் மையப்பகுதியான அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலணி முதல் வேளச்சேரி மற்றும் சென்னையின் புறநகர் பகுதியான பெரும்பாக்கம் வரை வெள்ள நீர் வடியாமல் உள்ளது.

தவிர இந்த பகுதியில் உள்ள பல குடியிருப்புகளில் உணவு மற்றும் குடிநீருக்கு வழியில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

மழை குறித்து கடலோர மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்த போதும் சென்னையின் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை முன்னேற்பாடாக நிவாரண முகாம்களில் தங்கவைக் நடவடிக்கை எடு்க்காமல் அரசு அலட்சியமாக இருந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் சென்னையின் புறநகர் பகுதிகளில் மீட்பு பணிக்காக சென்றுள்ள படகு குழுவினர் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் இருந்து மீட்புப் பணிக்காக பணம் பறிப்பதாகக் கூற்படுகிறது.

பல இடங்களில் தொடர்ந்து 70 மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் அவதிக்கு உள்ளாவதாகவும் எந்த ஒரு அதிகாரியையும் மக்கள் பிரதிநிதியையும் தொடர்புகொள்ள முடியவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.

மீட்பு மற்றும் புணரமைப்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.