1
 
கவுகாத்தி:
ஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், , காஸிரங்கா தேசிய வன உயிரியல் பூங்காவிலிருந்து அடித்துச் செல்லப்பட்ட மூன்று காண்டாமிருகக் குட்டிகளை வனத்துறையினர் காப்பாற்றியுள்ளனர்.
காஸிரங்கா பூங்கா, உலகின் மிக முக்கியமான வன விலங்கு சரணாலயங்களில் ஒன்றாகும். இங்கு  அழிவின் விளிம்பில் இருக்கும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள், யானைகள் , சதுப்பு நில மான்கள் மற்றும் புலிகள் போன்ற விலங்குகள் இருக்கின்றன.
2
வெள்ளப்பெருக்கின் போது, இந்தப் பூங்காவிலிருந்து நூற்றுக்கணக்கான விலங்குகள் அருகிலுள்ள கர்பி அங்லாங் பகுதியில் அமைந்துள்ள குன்றுகளுக்கு சென்று விடுகின்றன.
சூழ்ந்த தேசியப் பூங்காவின் ஊடாக ஒரு யானைக்கூட்டம் நீந்தி தேசிய நெடுஞ்சாலை வழியாக மேட்டு நிலத்தை நோக்கி சென்றது.
3
 
இந்த நிலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட  இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் காண்டா மிருகக் குட்டிகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டனர். இவை தற்போது  விலங்கு நல மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கின்றன.
இதே போல. ஏழு ஹாக் மான்களும் வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்டதாகவும், இவையும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.