லக்னோ:
ந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 15 ரூபாய் கடனைத் திருப்பித் தராததால், தலித் தம்பதி வெட்டிக் கொல்லப்பட்டனர்.
உ.பியின் மைன்புரி மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) இந்தக் கொடூர சம்பவம் நடந்தது.
இப்பகுதியில் வசிக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த பரத், மம்தா தம்பதி இருவரும் கூலித் தொழிலாளிககள்.   இவர்களுக்கு மூன்று குழந்தைகள்.
இப்பகுதியில் உயர்சாதியைச் சேர்ந்த அசோக் மிஸ்ரா மளிகைக்காடை வைத்திருக்கிறார். சில தினங்களுக்கு முன், தங்களது குழந்தைகளுக்காக தலித் தம்பதியினர் இக் கடையில் பிஸ்கெட் பாக்கெட் வாங்கினார்கள். அதற்கான தொகை பதினைந்து ரூபாய் இல்லாததால் கூலி வாங்கித் தருவதாகச் சொல்லிச் சென்றார்கள்.

தலித் மக்கள் போராட்டம்
தலித் மக்கள் போராட்டம்

அதன்பிறகு நடந்ததை நேரில் பார்த்த நதீம் என்பவர், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்:
“கடைக்காரர் சத்தம் போட்டதும், இன்று மாலை எங்களுக்கு கூலி வந்துவிடும். தந்துவிடுகிறோம்” என்று அத் தம்பதி கூறினர்.  ஆனால் பணம் கேட்டு தொடர்ந்து கூச்சலிட்ட மிஸ்ரா, அத் தம்பதியினரை கடுமையாக திட்டினார்.
அத்தம்பதியினர் ஏதும் பேசாமல் செல்ல முற்பட்டனர். ஆத்திரமான மிஸ்ரா, அருகிலுள்ள தனது வீட்டுக்கு ஓடி அரிவாளுடன் திரும்பி வந்தார். பரத்தை அவர் சரமாரியாக வெட்டினார். அவரைத் தடுத்த மனைவி மம்தாவையும் கடுமையாகத் தாக்கினார். அதில், தம்பதியர் இருவரும் அதே இடத்தில் உயிரிழந்துவிட்டார்கள்” என்று நதீம் தெரிவித்துள்ளார். இவர் அதே கிராமத்தில் வசிப்பவர்.
இந்த சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து, தலித் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, குஜராத் மாநிலத்தில், இறந்த மாட்டின் தோலை உரித்து விற்க முயன்றதாக, நான்கு தலித் இளைஞர்களை, பசு பாதுகாப்பு இயக்கம் என்று கூறப்படும் அமைப்பினர் நடுரோட்டில் வைத்து தாக்கினர். இந்த காட்சி சமூக வலைத் தளங்களில் பரவியதை அடுத்து நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்துள்ளது.
“மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே தலித் மக்களின் மீதான தாக்குதல் தொடர்ந்து நடந்துவருன்றன” என்று  சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.