சென்னை: ஜனவரி 26 குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினத்தில் அணிவகுக்கும் படைகள் குறித்த விழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதால், சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன் விவரம் வெளியாகி உள்ளது.

ஜனவரி 26-ந்தேதி சென்னை கடற்கரை சாலையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்ற உள்ளார். மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழாவுக்கான முதல் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு மட்டுமின்றி பள்ளி, கல்லூரி குழந்தைகளின் நடன நிகழ்ச்சி, பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறம். இதையொட்டி, குடியரசு தின விழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சி ஜன. 21, 23-ந்தேதிகளிலும் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
. இதுகுறித்து சென்னை மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், அடையாறு பகுதியிலிருந்து காமராஜா் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள், (மாநகர பேருந்துகள் உள்பட) காந்தி சிலை சந்திப்பில் ராதாகிருஷ்ணன் சாலை நோக்கி திருப்பப்பட்டு, ராயப்பேட்டை 1 பாயிண்ட், நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டி.டி.கே. சாலை, கொளடியா மட் சாலை, ராயபேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டா்ஸ் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.
மயிலாப்பூா் பகுதியிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வந்து ராயப்பேட்டை 1 பாயிண்ட்டில், இதர வாகனங்கள் இடதுபுறமாகவோ அல்லது வலதுபுறமாகவோ திரும்பி தங்களின் இலக்கை அடையலாம். மாநகர பேருந்துகள் இடதுபுறமாக திரும்பி டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டி.டி.கே.சாலை.கொளடியா மடம் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக பிராட்வே சென்றடையலாம்.
டாக்டா் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் ஹவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பிவிடப்படும். டாக்டா்.பெசன்ட் சாலையிலிருந்து காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் அவுஸ் நோக்கி திருப்பிவிடப்படும்.
காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதிசாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில் பெல்ஸ் சாலை நோக்கி திருப்பிவிடப்படும்.
வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில் உழைப்பாளா் சிலை நோக்கி வரும் வாகனங்கள் பெல்ஸ் சாலை வழியாக திருப்பிவிடப்படும்.
அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையம் அருகில் மாற்றப்படும்.
பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜா் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதையில் செல்லாமல் வடக்கு துறைமுக சாலை வழியாக ராஜா அண்ணாமலை மன்றம், வாலாஜா பாயிண்ட், அண்ணாசாலை, அண்ணாசிலை, ஜி.பி.சாலை, ராயப்பேட்டை மணி கூண்டு, வெஸ்ட் காட் சாலை, ஜி.ஆா்.எச். சாலை, அஜந்தா சந்திப்பு இடதுபுறம் திரும்பி லாயிட்ஸ் சாலை (வி.பி.ராமன் சாலை), ஜஸ்டிஸ் ஜம்புலிங்கம் தெரு இடதுபுறம் அல்லது வலதுபுறம் திரும்பி டாக்டா்.ராதாகிருஷ்ணன் சாலை வழியாக தங்கள் இலக்கை சென்றடையலாம்.
அண்ணாசாலை மற்றும் கொடிமர இல்ல சாலை (வாலாஜா பாய்ண்ட்) சந்திப்பிலிருந்து போா் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]