
சென்னை:
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் உத்தரவுப்படி, சென்னையில் உள்ள விடுதிகளில் காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தி வருகிறார்கள்.
வெளியூரைச் சேர்ந்த ஆயிரம் ரவுடிகள், சென்னை ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களை வைத்து கலவரத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வந்த தகவலை அடுத்து ஆளுநர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Patrikai.com official YouTube Channel