தேவையில்லாத 1,159 சட்டங்கள் நீக்கம்! அமைச்சர் மகேஷ்சர்மா

Must read

 

டில்லி,

நாட்டில் தேவையில்லாத, தற்போதைய காலகட்டத்துக்குப் பொருத்தமில்லாத 1,159 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்

பாராளுமன்ற  லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியதாவது,

நடைமுறைக்கு உதவாத மேலும் தற்போதைய பயன்பாட்டில் இல்லாத 1,159 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் 400 சட்டங்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மறைவு குறித்து, இதுவரை வெளியிடப்படாத பல ரகசிய ஆவணங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அவை ‘டிஜிட்டல்’ வடிவில் வடிவில் இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சில ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு விரைவில் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article