தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து கருணாஸை நீக்க முடியுமா?  : விஷால்  கேள்வி

Must read

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் நீக்கப்பட்டதாக இன்று மாலை பத்திரிகை குறிப்பு வெளியாக. அவசர அவசரமாக சினிமா செய்தியாளர்களை சந்தித்தார் விஷால்.
அப்போது அவர் பேசும்போது, “தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து என்னை நீக்கியதை இப்போதுதான் நான் கேள்விப்பட்டேன். எனக்கு இது ஆச்சரியம் அளிக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது.
எப்போதும் எந்த ஒரு சங்கத்தில் இருந்து கடிதம் அனுப்பும்போதும், முதலில் சம்பந்தபட்ட நபர்களுக்கு கடிதம் அனுப்பிவிட்டுதான் பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்புவார்கள். ஆனால் நான் தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதை பத்திரிக்கையாள நண்பர்கள் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன். எனக்கு இப்போதுவரையிலும் கடிதம் எதுவும் வரவில்லை.
போண்டா, பஜ்ஜி சாப்பிட்டு கொண்டு தயாரிப்பாளர் சங்கத்தினர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருக்கிறார்கள் என்று நான் ஒரு வார இதழுக்கு பேட்டி அளித்துள்ளேன் என்று கூறுகிறார்கள்.
‘போண்டா’, ‘பஜ்ஜி’ என்பது கெட்ட வார்த்தையா…? அது ஒரு தவறான உணவு இல்லை. நடிகர் சங்கத்தில், எங்கள் படப்பிடிப்பில்கூட நாங்கள் அவைகளைத்தான் சாப்பிடுகிறோம்.
d
என்னை பொறுத்தவரை சிறிய தயாரிப்பாளர்கள், பெரிய தயாரிப்பாளர்கள் என்றில்லாமல் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் குரல் கொடுப்பேன்.
 
தமிழ் திரையுலகம் எனக்கு சாப்பாடு போட்ட தெய்வம். இங்கு  ஏதாவது தவறான விஷயம் நடந்தால் நான் நிச்சயம் குரல் கொடுப்பேன்.
கேள்வி கேட்பது தவறே இல்லை. கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டும். இதுதான் எல்லா சங்கங்களின் நடைமுறை.
என்னை எதற்காக நீக்கி இருக்கிறார்கள் என்ற காரணம் தெரியாமலேயே பேசிக்கொண்டு இருக்கிறேன்.
என்னை பொறுத்தவரை தற்போதைய தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு அண்ணனுக்கும் எனக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை.  ஆனால் தாணு அண்ணனிடம் கேட்பதற்கு என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன.
கேள்விகளுக்கு பதில் வரவில்லை என்றால் வரும் ஜனவரி மாதம் நடக்கும் தயாரிப்பாளர் சங்க  தேர்தலில் நிற்கவும் எனக்கு பயமில்லை.
இந்த விஷாலை நீக்க முடிந்த தயாரிப்பாளர் சங்கத்தால் நடிகர் கருணாஸை ( அ.தி.மு.க. ஆதரவு பெற்ற எம்.எல்.ஏ.) நீக்க முடியுமா?”  என்றார் ஆக்ரோஷமாக கேட்டு முடித்தார் விஷால்.

More articles

Latest article