மதத்தை காரணம் காட்டி மிருகங்களை பலியிட பெல்ஜியத்தில் தடை

Must read

புருசெல்ஸ்

தக் காரணங்களுக்காக மிருகங்களை பலியிட பெல்ஜிய அரசு தடை விதித்துள்ளது.

Sheep at a cattle market

பல ஐரோப்பிய நாடுகளில் விலங்குகள் வதை தடை செய்யப்பட்டுள்ளது.  உணவுக்காக விலங்குகளை கொல்லும் போது அவைகளை வெட்டிக் கொல்லக் கூடாது என அந்நாட்டு சட்டங்கள் தெரிவிக்கின்றன.   ஆகவே அவை வாயுக்கள் மூலம் மயக்கம் அடைய வைக்கப்பட்டு  வலியை உணராத போது கொல்லப்படுகின்றன.    கோழிகள்  போன்ற பறவைகள் மின்சாரத்தின் மூலம் கொல்லப்படுகின்றன.

பெல்ஜியம் நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இஸ்லாமியர்களும் யூதர்களும் மிருகங்களை வெட்டி பலி கொடுத்து வருகின்றனர்.    அவர்கள் இந்த மிருகங்கள் ஒரே வெட்டில் கொல்லப்படுவதால் வலியை உணராமல் இறந்து விடும் என தெரிவித்துள்ளனர்.    மேலும் கொல்லப்படுவதற்கு முன்பு இந்த மிருகங்களுக்கு அதிர்ச்சி உண்டாவதால் அவைகளால் நடப்பவைகளை உணர முடியாது எனவும் தெரிவித்தனர்.   இதற்கு அங்குள்ள மிருக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

பெல்ஜிய மிருக உரிமை ஆர்வலர் ஆன் டி கிரீஃப், “ஒரே வெட்டில் கொல்வதால் வலியை உணர முடியாது என்பதை ஒப்புக் கொள்ள முடியாது.   அத்துடன் அதிர்ச்சி என்பது வலியை மரத்துப் போகச் செய்வது அல்ல.   அத்துடன் ஹலால் முறையில் இஸ்லாமியர்கள் வெட்டுவதும் ஒருவகை யான மத பலி என்றே கூறலாம்.

இவர்கள் இன்னும் கற்காலத்தில் வாழ்ந்து வருகிறார்கள் என தோன்றுகிறது.    மிருகங்களுக்கும் உரிமை உள்ளது என்பதை இவர்கள் மனதில் கொள்வதில்லை.  அனைவருக்கு சட்டம் பொது என இருக்கும் போது மதக் காரணங்களுக்காக மிருகங்களை பலி இடுவது தவறு” என குறிப்பிட்டிருந்தார்.

அதை ஒட்டி மிருக ஆர்வலர்கள் பலர் மதக் காரணங்களுக்காக மிருகங்களை பலியிடுவதை பெல்ஜிய அரசு தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  இதை ஒட்டி பெல்ஜிய அமைச்சரவை மதத்தை காரணம் காட்டி மிருகங்களை பலியிடுவதை அனுமதிக்க முடியாது எனவும் அதை உடனடியாக தடை செய்வதாகவும் அறிவித்துள்ளது.

அரசின் இந்த உத்தரவை மிருக ஆர்வலர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.  இது குறித்து மிருகங்கள் நல ஆர்வலர் ஒருவர் தனது டிவிட்டரில், “மிருகங்களை வதை செய்வதை தடுத்த மிருக நல அமைச்சருக்கு வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.

More articles

Latest article