உலக வங்கித் தலைவர் ஜிம் யோங் கிம் ராஜினாமா

Must read

வாஷிங்டன்

லக வங்கித் தலைவர் பதவியில் இருந்து ஜிம் யோங் கிம் ராஜினாமா செய்துள்ளார்.

உலக வங்கித் தலைவர் பதவிக்கு வருபவரை உலக வங்கியின் மிகப் பெரிய ங்குதாரரான அமெரிக்கா முடிவு செய்கிறது.   ஐரோப்பிய நாடுகள் இதற்கானவர்களை பரிந்துரை செய்கிறது.    ஆயினும் அமெரிக்காவே இறுதி முடிவை எடுக்கிறது.    இதற்காக எந்த விதிமுறைகளும் இல்லை எனினும் அதுவே வழக்கமாக உள்ளது.

உலக வங்கியின் தலைவராக கடந்த 2012 முதல் ஜிம் யோங் கிம் பதவி வகித்து வருகிறார்   அந்த சமயத்தில் அவருடன் நைஜீரியாவை சேர்ந்த நிகோஜி ஒகஞ்சோ போட்டியில் இருந்தார்.    ஒரு அமெரிக்கருக்கும் நைஜிரியருக்கும்  போட்டி நடந்தது அதுவே முதல் முறையாகும்.    அமெரிக்கா மிகப் பெரிய பங்குதாரர் என்னும் முறையில் ஜிம் யோங் கிம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவருடைய பதவிக்கால 2017 உடன் முடிவடைந்தது.   கடந்த 2016 ஆம் ஆண்டு மீண்டும் போட்டியை தவிர்க்க அப்போதைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கிம் மின் பதவிக்காலத்தை நீட்டிப்பு செய்தார்.   தற்போது அவருடைய பதவிக்காலம் 2022 வரை உள்ளது.    இந்நிலையில் நேற்று கிம் தனது ராஜினாமாவை அறிவித்தார்.

ஜிம் யோங் கிம் அடுத்த மாதம் முதல் பதவி விலக உள்ளதாக தெரிவித்துள்ளார்.   அதன் பிறகு புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை உலக வங்கியின் நிர்வாக அதிகாரி கிறிஸ்டாலினா தலைவர் பொறுப்பை வகிக்க உள்ளார்.   ஜிம் யோங் கிம் அளித்த ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக அவர் அறிவித்துள்ளார்.

More articles

Latest article