சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இரு பிரிவினர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் ஒருவருக்கொருவர் அரிவாளால் வெட்டிக்கொண்டதில், 10க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 3 பேர் பலியாகினர். அவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி அறிவித்தார். ஆனால், நிதி போதாது என்று அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கியதை தொடர்ந்து நிவாரண நிதி ரூ.15 லட்சமாக உயர்த்தி முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். பலத்த காயமடை ந்தவர்களுக்கான நிவாரணம் 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கச்சநத்தம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.