ஹாம்லி பொம்மை தயாரிப்பு நிறுவனத்தை ரூ.620 கோடிக்கு வாங்கிய ரிலையன்ஸ் நிறுவனம்

Must read

மும்பை:

பிரிட்டிஷ் பொம்மை தயாரிப்பு நிறுவனமான ஹாம்லியை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 620 கோடிக்கு வாங்கியுள்ளது.


பிரிட்டிஸைச் சேர்ந்த ஹாம்லி நிறுவனம் 259 ஆண்டுகளாக பொம்மைகள் தயாரித்து வருகிறது.
பழமையான இந்த நிறுவனம் கடந்த சில வருடங்களாக நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

54 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்ட 7 மாடி கட்டடத்தில் இந்த நிறுவனம் இயங்குகிறது.
சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் இருப்பதால், ஹாம்லி நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.620 கோடிக்கு வாங்கியுள்ளது.

ரிலையன்ஸ் பிராண்ட் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தர்ஷன் மேத்தா கூறும்போது, ஹாம்லி நிறுவனத்தை வாங்கியதன் மூலம் எங்கள் கனவு நிறைவேறியுள்ளது என்றார்.

 

More articles

Latest article