த்தாரா, மகாராஷ்டிரா.

றைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ காந்தி குறித்த மோடியின் கருத்துக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பதில் அளித்துள்ளார்.

சென்ற வாரம் பிரதாப்கரில் நடந்த ஒரு தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசும் போது ”ராகுல் காந்தி தன்னை குற்றமற்றவர் என காட்டிக் கொள்ள என் மீது பழியை சுமத்தி வருகிறார். அவருடைய தந்தை மறைந்த ராஜிவ் காந்தியை காங்கிரசார் குற்றமற்றவர் என கூறி வந்தனர். ஆனால் அவர் ஒன்றாம் நம்பர் ஊழல் பேர்வழியாக மரணம் அடைந்தார்” எனக் கூறினார். இது அரசியல் உலகில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெருந்தன்மையாக இதை பெரிது படுத்த விரும்பவில்லை என தெரிவித்தார். ஆயினும் பல எதிர்க்கட்சி தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். கர்நாடக பாஜகவின் மூத்த தலைவரும் தற்போதைய சாம்ராஜ்நகர் பாஜக வேட்பாளருமான ஸ்ரீனிவாச பிரசாத் அவர் ஊழல் புரிந்ததற்காக மரண தண்டனை அளிக்கப்படவில்லை எனவும் விடுதலை புலிகளால் கொல்லப்பட்டதாகவும் எனவே அவர் மீதான இத்தகைய விமர்சனம் தேவையற்றது என கூறினார்.

நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களிடம், “ராஜிவ் காந்தியின் மரணம் மிகவும் சோகமானது. காந்தி குடும்பம் நாட்டுக்கு இரண்டு பிரதமர்களை அளித்தது. இருவருமே கொல்லப்பட்டனர். அத்தகைய ஒரு பெரிய தியாகத்தை செய்த ராஜிவ் காந்தியையும் அவர் குடும்பத்தையும் மோடி தவறான வார்த்தைகளால் விமர்சிப்பது அவர் பதவிக்கு அழகில்லை.” என தெரிவித்துள்ளார்.