டெல்லி:

னது நிறுவனத்திற்கு முதலீடு குவிந்துள்ளதால், ரிலையன்ஸ் நிறுவனம் நிகர கடன் இல்லாத நிறுவனமாக மாறி இருப்பதாக அந்நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

முகேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ (Jio Telecommunications company) வுடன் பல வெளிநாடுகள் இணைந்து வருகின்றன. இதன் காரணமாக முதலீடு குவிந்து உள்ளதால், கடன் இல்லாத நிறுவனமாக மாறி இருப்பதாகவும்,  ஜியோவுடன் கூட்டுசேர்வதில் உலகளாவிய நிதி முதலீட்டாளர் சமூகத்தின் தனித்துவமான ஆர்வத்தால் நாங்கள் பெருமையடைந்துள்ளோம் என்று முகேஷ் அம்பானி தெரிவித்து உள்ளார்.

முகேஷ் அம்பானிக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள், எண்ணை நிறுவனங்கள் உள்பட ஏராளமான நிறுவனங்கள் உள்ளன.  குறிப்பாக தொலைத்தொடர்பு மற்றும் எண்ணை நிறுவனங்களில் முதலீட்டை பெறும் வகையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் உரிமைகள் வெளியிட்டிருந்தது.

அதையடுத்து, கடந்த 58 நாட்களில் சர்வதேச நிறுவனங்கள் மூலம் ரூ.1.15 கோடி பங்கு விற்பனை மூலம் ரூ.53,124 கோடி கிடைத்துள்ளது.  மேலும், ரூ.1.68 லட்சம் கோடி அளவிலான முதலீடு வந்ததால் கடன் இல்லாத நிறுவனமாக மாறியது.

இதுகுறித்து கூறிய முகேஷ் அம்பானி,  உலகின் சில முதன்மையான நிதி முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றுள்ள பதிவு முதலீடுகள் மற்றும் ஒரு மெகா பங்கு விற்பனை ஆகியவை இணைந்து, ரிலையன்ஸ் குழுமத்தை மார்ச் 2021-க்கு முன்னதாகவே நிகர கடன் இல்லாததாக மாற உதவியுள்ளதாக அம்பானி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.