கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு இந்தி சினிமா உலகில் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

சில மாதங்களுக்கு முன்னர் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தியேட்டர்கள் திறந்ததால் இந்தி சினிமா தயாரிப்பாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

“கடந்த ஆண்டு விட்டதை இந்த ஆண்டு பிடித்து விடலாம்” என கனவு கண்டனர்.

எல்லாம் போச்சு.

மும்பை உள்பட மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மாநிலம் முழுக்க இரவு நேர ஊரடங்கு போடப்ப்பட்டுள்ளதால் புதிய சினிமாக்களை ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மாதத்தில் ஷேரா, சூரியவன்ஷி, பாண்டி அவுர் பாப்லி -2, சத்யமே ஜெயதே, ஹாத்தி மேரா சாத்தி உள்பட அரை டஜன் இந்தி படங்கள் வெளியாவதாக இருந்தது.

இரவு நேர ஊரடங்கால், அந்த படங்களின் ரிலிஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

“கடந்த ஆண்டை விட இந்தி சினிமா பெரும் நஷ்டத்தை சந்திக்கும்” என பொருமுகிறார்கள், அங்குள்ள தயாரி[ப்பாளர்கள்.

– பா. பாரதி