சென்னை:
திமுக போட்டியிடும் 6 தொகுதிகளாக சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, அரியலூர், வாசுதேவநல்லூர் (தனி), மதுராந்தகம் (தனி)  தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 இடங்கள், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி 3, மனிதநேய மக்கள் கட்சி 2 ஆகிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இருந்த இழுபறி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

கொமதேகவுக்கு 2 இடங்கள், தவாகவுக்கு 1 ஆகிய இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளன. இதனால் திமுக 177 இடங்களில் போட்டியிடவுள்ளது.

இந்நிலையில், மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தப்படி, சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, அரியலூர், வாசுதேவநல்லூர் (தனி), மதுராந்தகம் (தனி)  ஆகிய தொகுதிகளில் மதிமுக போட்டியிடும் என்று மதிமுக தலைவர் வைகோ அறிவித்துள்ளார்.