சென்னை: தமிழ்நாடு அரசு வழக்கும் கலைஞர்  மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பம் செய்தவர்களில், நிராகரிக்கப்பட்ட  விண்ணப்பதாரர்கள், இன்று முதல்  (18ந்தேதி) விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி இசேவை மூலமும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  செப்டம்பர் 15ந்தேதி  காஞ்சிபுரத்தில்  நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், தொடங்கி வைத்தார்.  முன்னதாக, கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு, சிறப்பு முகாம்கள் மூலமாகவும் விண்ணப்பங்கள்செப்டம்பர் 5ஆம் தேதி வரை பெறப்பட்டன. இதில், மொத்தம்,  1கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் 1 கோடியே 6 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  சுமார் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, எந்தெந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது, எந்த காரணத்தால் நிராகரிக்கப்பட்டது , எந்தெந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது குறித்த குறுஞ்செய்தியானது அந்தந்த குடும்ப தலைவிகளின் செல்போன் எண்ணிற்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள்,  அதுதொடர்பான குறுஞ்செய்தி வராத மகளிர் தங்கள் பகுதியில் உள்ள இசேவை மையத்தில் மேல்முறையீடு செய்யலாம் என சிறப்பு செயலாக்கத்துறை அறிவித்துள்ளது. மேலும்,  குறுஞ்செய்தி வராத 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், “மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள்  18ந் தேதி முதல் இ சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்”,   மேல்முறையீடு செய்த  30 நாட்களில் அதற்கான நடவடிக்கை எடுக்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இணையவழி வாயிலாக மட்டுமே நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்றுமுதல் நிராகரிக்கப்பட்ட விண்ணதாரர்கள் இசேவை மூலம் விண்ணப்பிக்கும் காலம் தொடங்கி உள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15ந்தேதி பணம் கிடைக்கும் என அறிவிப்பு…