பெண்களை ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதிக்க மறுப்பது கொடுமையானது என ஹிஜாப் பிரச்சினை குறித்து நோபல் பரிசு வின்னர் மலாலா கருத்து தெரிவித்து உள்ளார்.

பாகிஸ்தானில் பெண் கல்விக்காக குரல் கொடுத்து தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு மீண்ட மலாலா யூசுப்சாயி, இந்தியாவில் ஹிஜாப் விவகாரம் குறித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,

“கல்லூரிகள் எங்களை கல்வியா? ஹிஜாபா? என்று தேர்வு செய்யும் நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது. பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளி செல்ல அனுமதி மறுப்பது அச்சுறுத்தும் செயலாக உள்ளது. குறைந்த ஆடை, அதிகமான ஆடை என ஆடையின் அடிப்படையில் பெண்களை ஏதேனும் வரம்புக்குள் அடையாளப்படுத்துதல் தொடர்கிறது. பெண்களை இவ்வாறாக ஓரங்கட்டும் செயல்களை இந்தியத் தலைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

மலாலா யூசுப்சாயி கடந்த 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் விருதைப் பெற்றார். உலகிலேயே மிகச் சிறிய வயதில் அமைதிக்கான நோபல் விருதைப் பெற்றவர். இவர் ,2021 நவம்பர் 10,  அன்று, பர்மிங்காமில் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட கழக மேலாளரான அசர் மாலிக்கை இஸ்லாமிய முறைப்படி மணந்தார்.