சென்னை:

சீன அதிபருடன் சந்திப்பு நடைபெறும் நிலையில், மாமல்லபுரம் அருகே நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள பிரதமர் மோடி இன்று அதிகாலையிலேயே எழுந்து கடற்கரையில் நடைபயணம் மேற்கொண்டார்.

அப்போது இயற்கையை ரசித்தும், கடல் அலையில் காலை நனைத்தும் நடை பயற்சி மேற்கொண்டவர் நடை பயிற்சியின்போது கடற்கரையில் காணப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் குப்பை கூளங்களை ஒரு பிளாஸ்டிக் பையில் சேகரித்தார்.

இது தொடர்பான வீடியோவை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதுகுறித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, மாமல்லபுரத்தின் அழகிய கடற்கரையை ஒட்டி நடைபயிற்சி மேற்கொண்டதாகவும், சுமார் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்து புத்துணர்ச்சி பெற்றதாக தெரிவித்து உள்ளார்.

மேலும், தனது நடைபயிற்சியைத் தொடர்ந்து சுமார் 30 நிமிடம் கடற்கரையில் காணப்பட்ட பிளாஸ்டிக் உள்பட  குப்பைகளை சேகரித்து,  அதை  ஹோட்டல் ஊழியர்களில் ஒருவரான  ஜெயராஜிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்து உள்ளார்.

பொது இடங்கள் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருப்பதை உறுதி செய்வோம்!

நாம் ஆரோக்கியமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்வோம்.

இவ்வாறு பதிவிட்டு உள்ளார்.

கடற்கரையில் குப்பை சேகரிக்கும் பிரதமர் மோடி – வீடியோ – கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://youtu.be/HMiHhmCTKiA

மோடி நடைபயிற்சி மேற்கொண்ட புகைப்படங்கள்