செம்மரம் வெட்டியதாக 25 தமிழர்கள் ஆந்திராவில் கைது!

நெல்லூர்,

ந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தை சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தமிழர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் அவலம் ஆந்திராவில் நடைபெற்று வருகிறது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கதிரிநாயுடு வனப்பகுதியில் சிலர் செம்மரம் வெட்டி கடத்துவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, ரோந்து சென்ற ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் , செம்மரம் வெட்டிக் கடத்தியதாகக் கூறி 25 தமிழர்களை  கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து செம்மரத்தடுப்பு போலீசார் கூறியதாவது, வனப்பகுதியில் 25 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை வெட்டி வேனில் ஏற்றி கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த  25 பேரையும் சுற்றி வளைத்துக் கைது செய்ததாக  கூறியுள்ளனர்.

அவர்களுடன் செம்மரம் கடத்த கொண்டுவந்த  வேன் மற்றும் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 28 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள போலீசார், கைது செய்யப்பட்டவ ர்களை கைகளை கட்டி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரிடம் இருந்து தப்பியோட முயற்சிக்கும்போது காலில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து  அவர்களை  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது.


English Summary
red-sandal cutt, 25 Tamils arrested in Andhra Pradesh Police