சென்னை: ரயில்வே காவல்துறையில் கூடுதல் காவலர்களை நியமிக்க அனுமதி கோரி இந்திய ரயில்வே துறைக்கு  டிஜிபி சங்கர் ஜிவால் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழ்நாட்டில் ரயில்வே காவல்துறையில் போதுமான காவலர்கள் இல்லாததால், விடுமுறை தினங்களில், ரயில் பணிகள் இருக்கை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுகிறது. இதை தடுக்க முடியாமல் தற்போதுள்ள காவலர்கள் திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், கூடுதல் காவலர்களை நியமிக்க அனுமதி கோரி டிஜிபி சங்கர் ஜிவால் இந்தியன் ரயில்வேக்கு கடிதம் எழுதிஉ ள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,  தமிழ்நாட்டில் தினசரி 578 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 24 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். தமிழ்நாட்டில் சுமார் 1800 ரயில்வே போலீசார் பணியாற்றி வரும் நிலையில், ரயில்களின் எண்ணிக்கையும், ரயில் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.  மேலும், ரயிலில் வழிப்பறி, செயின் பறிப்பு, திருட்டு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கடத்தல் போன்ற பலவிதமான குற்ற செயல்கள் நடைபெற்று வருகின்றன. ரயிலில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதலாக காவலர்கள் நியமிக்க அனுமதி கோரி தமிழ்நாட்டு காவல்துறை டிஜிபி ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

சமீபத்தில் தீபாவளிக்கு ரயிலின் ஏசி டிக்கெட் புக்கிங் செய்திருந்த இளைஞர், தனது இடத்தில் முறையாக பயணம் செய்யாத முடியாத நிலை ஏற்பட்டது. அவரது இருக்கையில், முன்பதிவில்லாத பயணிகள் அமர்ந்து, ஏற்கனவே பதிவு செய்தவர்களை விரட்டி அடித்தனர். இநத்  விவகாரம் சமுக வலைதளங்களில் பரவி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரயில்வேக்கு கூடுதல் காவலர்களை நியமிக்க அனுமதி கோரப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு ரயில்வே காவல்துறையில் ரயில்வே நிர்வாக அனுமதியுடன் தான் காவலர்களை நியமிக்க முடியும். 50 சதவீதம் சம்பளம் ரயில்வே நிர்வாகத்தால் தமிழ்நாடு ரயில்வே காவல்துறையினருக்கு வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் ரயில்வே பாதுகாப்பு குறித்து ரயில்வே அதிகாரி களுடன், காவல்துறை ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.