சென்னை: தமிழகத்தில் 20,453 அரசு குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து மக்கள் வாழ தகுதியற்ற நிலையில் உள்ளதால், அவற்றை  உடனே இடிக்க அரசின்  தொழில்நுட்ப வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை திருவொற்றியூரில் அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ஒன்று மிகவும் பழுந்தடைந்த நிலையில் இடிந்து விழுந்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் பழுந்தடைந்து, மக்கள் வாழ தகுதியற்ற குடியிருப்புகளை கண்டறிந்து இடித்துதள்ள தமிழகஅரசு அறிவித்து, அதற்கான நிபுணர் குழுவையும் அமைத்தது.

அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கட்டடங்களை ஆய்வு செய்ய தமிழக அரசால் தொழில்நுட்ப வல்லுநர் குழு நியமிக்கப்பட்டு, கட்டடங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள  22,271 அரசு குடியிருப்புகளில் 20,453 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதால், அவற்றை உடனடியாக இடித்து மறுகட்டுமானம் மேற்கொள்ள அரசின் தொழில்நுட்ப வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது..

இது தொடர்பாக,நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் தொழில்நுட்ப வல்லுநர் குழு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

[youtube-feed feed=1]