அரசியலுக்கு வர தயார்! நடிகை சுகாசினி

சென்னை,

யக்குனர் மணிரத்தினத்தின் மனைவியும், நடிகர் கமலஹாசனின் அண்ணன் மகளுமான நடிகை சுகாசினி தானும் அரசியலுக்கு வரத் தயாராக இருப்பதாக கூறி உள்ளார்.

தமிழகத்தில் ஜெ.மறைவுக்கு பிறகு நடிகர், நடிகைகள் அரசியல் அவ்வப்போது குரல் கொடுத்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் பட்டும் படாமல் அரசியல் குறித்து பேசி வரும் நிலையில், நடிகர் கமலஹாசன் தான் அரசியலுக்கு வருவேன் என்று அதிரடியாக கூறி உள்ளார்.

ஏற்கனவே குஷ்பு போன்ற பல நடிகைகள் பல்வேறு அரசியல் கட்சிகளில் பணியாற்றி வரும் நிலையில் தற்போது நடிகை சுகாசினியும் தனது ஆசையை தெரிவித்து உள்ளார்.

சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை சுகாசினி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

நடிகர்கள்  கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் மட்டும்தான் அரசியலுக்கு வர வேண்டுமா?  நாங்கள் வரக்கூடாதா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ராதிகாவும், ரேவதியும், பூர்ணிமாவும், நதியாவும்தான் அரசியலுக்கு வரலாம். மக்கள் விரும்பினால்ர  இவையெல்லாம்  சாத்தியமாகும் என்றும் தெரிவித்தார்.

தமிழக மக்கள்  ஜெயலலிதாவை நம்பி பெரிய பொறுப்பை கொடுத்ததுபோல், எங்களை நம்பியும் பொறுப்புகளை கொடுங்கள். நாங்களும் அரசியலுக்கு வர தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
Ready to participate to the politics! Actress Suhasini